25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சித்ரா பெளர்ணமி 2025 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சித்ரா பெளர்ணமி 2025 

11.5.2025 ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை சித்ரா பெளர்ணமிகடும் வெயில் காலத்தில் குளிர் நிலவுடன் வரும் நாள் சித்திரா பெளர்ணமி அன்றுதான் இந்திர லோக தலைவன் இந்திரன் மதுரை சொக்கரை வழிபட்டு பல வரங்களை பெற்றான் .அழகர் ஆற்றில் இறங்கி மதுரையை சொர்க்கமாக மாற்றும் நாள்.மதுரையின் ஆதி வழிபாடு மட்டுமல்ல தமிழின் ஆதி விழா சித்திரை திருவிழா .

கோடிக்கணக்கான உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தன் அவதாரம் நாள்.கணக்கு எழுதுபவரின் பிறந்த நாள் என நமக்கு சூட்சுமமாக சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்து இருக்கிறது

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார் பேரறிவு கிரகம் லக்னத்தில் இருக்கும் நாள் அறிவுக்கு பலம் கொடுக்கும் நாள் அல்லவா அன்றைய தினம் நம் அறிவுக்கண் பிரகாசம் அடையும் நாள்..

மதுரையம்பதியில் சொக்கனை நாளை தரிசிப்பவர்கள் நாளை கிரிவலம் வந்து அண்ணாமலையானை பூசிப்பவர்கள் ,தாமிரபரணியில் குளித்து நெல்லையப்பனை காண்பவர்கள் ,கொடுமுடி மகுடேஸ்வரர் ,பவானி சங்கமேஸ்வரரை ,சென்னை கபாலீஸ்வரனை தரிசிப்பவர்கள் மட்டுமல்ல

உங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு அரச மர வினாயகரை காலையோ மாலையோ தரிசனம் செய்தாலும் பெரும் புண்ணியம்.அதிர்ஷ்டம்.அவர்கள் மூளை திறன் பல மடங்கு பிரகாசிக்க போகிறது

நாளை ஒரு வேளை உணவாவது பசித்தவர்களுக்கு கொடுங்கள் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு பேனா வாங்கி கொடுங்கள்

முதியவர்கள் வெயிலில் நொந்து நடந்து செல்பவர்களுக்கு குடையோ செருப்போ வாங்கி கொடுங்கள் ..

மாலையில் வீட்டில் தீபம் ஏற்றி ,வழிபடுங்கள் .உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் அம்மன் கோயிலில் சிவன் கோயிலில் அபிசேகத்துக்கு பால் வாங்கி கொடுங்கள்.

நீண்டதொலைவில்இருக்கும்கோயிலுக்குசென்றுஅவதிபடாதீர்கள்.முக்கியமாக மிதுனம் ,கன்னி ,தனுசு ,மீனம் ராசியினர் அருகில் இருக்கும் கோயிலில் வழிபடுவதே நல்லது.

குலதெய்வம் கோயில் சென்று மாவிளக்கு போட்டு சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட்டால் எல்லா கஷ்டமும் தீர்ந்து செல்வ நிலை உயரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News